என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் காமராஜ்"
திருவாரூர்:
தமிழ்மொழி காவலர் உ.வே.சாமிநாதய்யர் 165வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலைக்கு அமைச்சர் இரா.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டக் கலெக்டர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்வர் அறிவித்திருந்த இந்த சிறப்புநிதியினை பெற அனைத்துவகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்றசில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, தொழிலாளர்கள் தங்களுக்கு சிறப்புநிதி கிடைக்குமா? என்று கேட்டு வருகின்றனர். அவர்களின் கருத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
அப்போது சிறப்புநிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்புநிதி வழங்கப்படும். இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #SpecialAssistance
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது விஜயதரணி (காங்) எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் ரேசன் கார்டு பலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். நாங்கள் தொகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்கள் பெரும்பாலானோர் தனியாக வசிக்கும் பெண்களாக உள்ளனர்.
அவர்களுக்கு கணவர் இல்லை. குழந்தைகள் ஆதரவு இல்லை. எனவே ஒருநபர் கார்டுகளுக்கு முகவரியை உறுதி செய்து பொருட்கள் வழங்குங்கள். ஆதார் அட்டையை கூட சரி பார்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே ஒரு நபர் கார்டை ரத்து செய்யாதீர்கள் என்றார்.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறுவது சரியான செய்தி இல்லை.
தமிழகத்தில் ஒருநபர் கார்டு அதிகரித்ததால் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 33 ஆயிரம் கார்டுகள் மட்டும் ஒருநபர் கார்டு என கண்டறியப்பட்டது. அனைத்து பொருட்களை தனியாக பெறுவதற்காக இந்த கார்டை வாங்கியதாக தெரிகிறது.
ஆனாலும் ஒரு நபர் கார்டுக்கு 5 கிலோ அரிசி மட்டும் கிடைக்கும். எனவே எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது.
அவ்வாறு எங்கேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNAssembly #MinisterKamaraj
மன்னார்குடி:
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க கட்சியின் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. பட்ஜெட்டில் மக்கள் பயன்படும் திட்டங்களும் தற்போதைய செயல்பாட்டு திட்டங்களுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதேர்தல் நோக்கத்திற்காக போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட் இல்லை. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை என அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #relief #gajacyclone
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி கொல்லு மாங்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நன்னிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
பொங்கல் சிறப்பு பரிசு 1000 ரூபாய் பொது மக்களுக்கு வழங்குவதை தடுக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது. எப்படி முயற்சி செய்தாலும் திமுக அதில் தோல்வியை அடையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
கொடநாடு விவகாரத்தில் முன்னாள் ஆசிரியர் மேத்திவ்ஸ் அறிக்கையை சுட்டி காட்டி ஸ்டாலின் முதலமைச்சரை பதவி விலக வேண்டும் என சொல்கிறார். சயன் என்ற கூலிப்படை தலைவன் சொல்வதை கேட்டு பதவி விலக சொல்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது.
ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர். அது நடக்காததால் தற்போது இருவரும் அடித்து கொள்வது போல் நடித்து கொள்கின்றனர். டி.டிவி தினகரன் வாயை திறந்தாலே பொய்யாக பேசுகிறார்.
நமது ஊரை பொறுத்த வரை தினகரன் ஜீரோ. தினகரனால் 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசியல் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்ஜிஆர். பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாகை எம்.பி. கோபால், நன்னிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், மன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #ministerkamaraj #pongalgift #mkstalin
சென்னையில் 19 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 95 சதவீதம் கார்டுகளுக்கு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 10-க்கும் குறைவானவர்கள்தான் பொங்கல் பொருட்கள் வாங்காமல் இருந்தனர். விடுபட்டவர்களில் பெரும்பாலான மக்கள் இன்று வாங்கினார்கள்.
பொங்கல் பொருட்கள் பெரும்பாலும் வினியோகிக்கப்பட்டு விட்டதால் ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லை. பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் மட்டும் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசை வாங்கவில்லை.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 97 சதவீதம் வரை பொங்கல் பரிசு 1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்டவர்களுக்கு பொங்கல் முடிந்த பின்னரும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். #PongalCashGift #MinisterKamaraj
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை, ஆலடி அருணா (தி.மு.க.), “தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி ரேசன் பொருள் வாங்குவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் படித்தேன். அதை அமல்படுத்தினால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, அந்த கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் காமராஜ் பதில் அளிக்கும் போது, “தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி ரேசன் பொருட்களை பெறுவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் ரேசன் பொருள் வாங்குவோருக்கு அது பொருந்தாது. தமிழக அரசு நியாய விலைக்கடைகளில் இலவச அரிசி மற்றும் பொருட்களை வழங்குவதற்காக ஆண்டுக்கு 6ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது.
எனவே தமிழகத்தில் தற்போது ரேசன் பொருள் வாங்குவோர் அனைவருக்கும் தொடர்ந்து வினியோகம் செய்யப்படும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது. அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சைக்கு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் இருக்க மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருவது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டி உள்ளது. களிமண் சார்ந்த வயல் பகுதியில் மின்கம்பம் நடுவது சவாலான பணியாக உள்ளது. சீரமைப்பு பணியின் போது இதுவரை 2 மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் சீரமைப்பு பணிக்கு சிலர் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்படும். இதில் தவறு நடந்திருந்தால் மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #HIVBlood #PregnantWoman
திருவாரூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பயனாளிகளுக்கு தார்ப்பாய் மற்றும் 27 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் காமராஜ் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு, தமிழக அரசிடம் கேட்டுள்ள கூடுதல் தகவல் விரைவில் வழங்கப்படும். இதனை தொடர்ந்து உரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிப்பார்கள். பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. இது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது.
செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்வது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #MinisterKamaraj #ADMK
கஜா புயல் திருவாரூர் மாவட்ட பகுதியை கடும் சேதத்துக்கு உள்ளாக்கி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டார். அப்போது தாலுகா அலுவலக சாலை, மேலராஜவீதி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து ராஜாம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்.
அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
மாவட்டம் முழுவதும் 190 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 40 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பேரிடர் மேலாண்மை துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீட்பு பணிகள் தொய்வின்றி துரிதமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
தமிழகத்தில் கஜா புயல் கரையை கடந்தபோது பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
திருவாரூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterKamaraj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்